இந்தியா குறித்த சிந்தனையே இல்லாதவர்களால் இதைக் காப்பாற்ற முடியாது: கபில் சிபல்!

இந்தியா குறித்த சிந்தனையே இல்லாதவர்களால் இந்தியாவின் சிந்தனையைக் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமரிசித்துள்ளார். 
இந்தியா குறித்த சிந்தனையே இல்லாதவர்களால் இதைக் காப்பாற்ற முடியாது: கபில் சிபல்!


இந்தியா குறித்த சிந்தனையே இல்லாதவர்களால் இந்தியாவின் சிந்தனையைக் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமரிசித்துள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் விமரிசனத்துக்குப் பதிலடி தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான். அக்கட்சி, மத ரீதியில் இந்தியாவை பிரிக்காமல் விட்டிருந்தால், தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வரவேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது" என்றார்.

இதைத்தொடர்ந்து, இந்த மசோதா, மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் அமித் ஷாவின் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில் பேசுகையில்,

"உள்துறை அமைச்சர் எந்த வரலாற்றுப் புத்தகத்தை வாசித்தார் என எனக்குப் புரியவில்லை. இரண்டு தேசம் என்ற கொள்கை எங்களுடையது அல்ல. அது சாவர்க்கரால் முன்வைக்கப்பட்டது. ஒரே தேசம் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. உங்களுக்குத்தான் அதில் நம்பிக்கை இல்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்தியா குறித்த சிந்தனையே இல்லாதவர்களால் இந்தியாவின் கருத்தைக் காப்பாற்ற முடியாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com