நமாமி கங்கா திட்டத்தின் காரணமாகவே கங்கா நதி தூய்மையாக உள்ளது: யோகி ஆதித்யநாத்

நமாமி கங்கா திட்டத்தின் காரணமாக தற்போது கங்கா நதி தூய்மையாக உள்ளது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
நமாமி கங்கா திட்டத்தின் காரணமாகவே கங்கா நதி தூய்மையாக உள்ளது: யோகி ஆதித்யநாத்

நமாமி கங்கா திட்டத்தின் காரணமாகவே தற்போது கங்கா நதி தூய்மையாக உள்ளது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

தொழிற் சாலைக் கழிவுகள், நீர்வரத்துக் குறைவு மற்றும் வேகமாக சரிந்துவரும் நிலத்தடி நீர்மட்டம் போன்ற காரணங்களால் கங்கை நதி மாசடைந்தது. இதனை தடுக்கும் நோக்கிலும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கிலும் 'நமாமி கங்கா திட்டம்' கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று கங்கை நதியை பார்வையிட வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், 'இந்தியாவில் தாய்க்கு சமமானதாகக் கருதப்படும் கங்கை நதியை சுத்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 'நமாமி கங்கா திட்டம்' தொடங்கப்பட்டது. மிகவும் தூய்மையான நதிக்காக, இந்த இயக்கத்தை ஆரம்பித்த நரேந்திர மோடி அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது கங்கை நதியில் அதிகப்படியான மீன்கள் காணப்படுகின்றன.

தற்போது நான் நின்று கொண்டிருக்கும் சிசாமோ கால்வாய் ஒருகாலத்தில் ஆசியா முழுவதிலும் மிகப்பெரிய கழிவுநீர் வடிகாலாக இருந்தது. மேலும், கான்பூரின் முழு கழிவுகளும் ஆற்றில் கலந்தன. கழிவுநீர் காரணமாக முழு நதியும் கறுப்பாக மாறியது. ஆனால் இப்போது நிலைமை மிகவும் சீராகியுள்ளது. இதுபோல மாநிலத்தில் பல இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் ஆற்றுடன் இணைவதை தடுத்து, ஆற்றின் சுத்தமான நிலையை பேணுவோம்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com