ஆச்சரியம்.. ஆனால் உண்மை: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


தமிழகத்தில் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, ஆச்சரியம், ஆச்சரியம், 13ம் தேதி இரவு மற்றும் 14ம் தேதி காலையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எண்ணியிருந்த நிலையில் தற்போது காணப்படும் விஷயங்கள் கனமழை பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது.

அதாவது கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்து வரும் மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, அதனால் 13ம் தேதி இரவு மற்றும் 14ம் தேதி காலை வரை திடீர் மழையை எதிர்பார்க்கலாம்.

கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் இவ்விரு நாட்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, இந்த மோதல் மிகச் சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். நேரம் மாறிவிட்டால் மழைக்கான வாய்ப்பு பறிபோகும். இல்லையென்றால் அங்கொன்றும், இங்கொன்றுமாக லேசான மழை மட்டுமே பெய்யும். சென்னைக்கு இந்த நிகழ்வு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்று எதிர்பார்த்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com