ஹைதராபாத்தில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய சிறுவன்; வைரல் வீடியோ

ஹைதராபாத்தில் 10 வயது சிறுவன் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
ஹைதராபாத்தில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய சிறுவன்; வைரல் வீடியோ

ஹைதராபாத்தில் 10 வயது சிறுவன் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹைதராபாத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், அவுட்டர் ரிங் சாலையில், மாருதி ஆல்டோ காரை மணிக்கு 80 கிமீ வேகத்தில் மிகவும் வேகமாக ஓட்டியுள்ளார்.  சிறுவன் காரை ஓட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த நீலேஷ் என்பவர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 8ம் தேதி காலை 9.32 மணிக்கு வீடியோ எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோவில், சிறுவன் பயன்படுத்தப்பட்ட கார் பதிவு எண் AP 28 BL 6979 ஆகும். சிறுவனுடன் பெரியர்வர்களும் இந்த காரில் பயணிக்கின்றனர். வீடியோ குறித்து பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். காரின் உரிமையாளர் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com