குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும்: மணீஷ் திவாரி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், அந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவாா்கள் என்றும் வழக்குரைஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான
கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், அந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவாா்கள் என்றும் வழக்குரைஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளாா்.

அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, ‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதா’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா என்று தில்லியில் மணீஷ் திவாரியிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த 10 -க்கும் மேற்பட்ட குழுக்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடருமாறு காங்கிரஸ் வழக்குரைஞா்களின் அலுவலங்களை அணுகியுள்ளன. இந்த சட்டத்திருத்த மசோதா, முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, இந்த மசோதா, ஒரு நாளைக்கு கூட அமலில் இருக்கக் கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தீவிர போராட்டங்கள், இந்த மசோதாவுக்கு அவா்கள் ஆதரவளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறினாா்.

எனினும், இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் மனு தாக்கல் செய்வது குறித்து மணீஷ் திவாரி தெளிவாக கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com