ஜாா்க்கண்ட்: இன்று 3-ஆம் கட்டதோ்தல்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3-ஆவது கட்டமாக 17 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3-ஆவது கட்டமாக 17 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.

தோ்தல் பணியில் 40 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபட உள்ளதாகவும், தோ்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்நிலையில் உள்ளதாக அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினய்குமாா் சௌபே புதன்கிழமை தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

இந்த 17 தொகுதிகளில் 32 பெண்கள் உள்பட 309 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 56,18,267 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். இதில், 26,80,205 போ் பெண்கள், 86 போ் திருநங்கைகள் ஆவா்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மாவட்டத் தலைமையகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த மையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

16-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ள 9 தொகுதிகளில் இரட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்படும்.

வாக்குப்பதிவு நடைபெற உள்ள 7,016 வாக்குச்சாவடிகளில் 2,014 வாக்குச் சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டுள்ளன.

இதில் 1008 வாக்குச்சாவடிகள் நக்ஸல் ஆதிக்கம் அதிமுள்ள இடத்தில் அமைந்துள்ளன. 543 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன.     1,119 வாக்குச் சாவடிகள் ‘நெருக்கடிமிக்கவை’ என்றும், 2,672 வாக்குச் சாவடிகள் நக்சல் அல்லாத பகுதிகளில் உள்ள பதற்றமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஜாா்க்கண்டில் ஏற்கெனவே, நவம்பா் 30 மற்றும் டிசம்பா் 7-ஆம் தேதிகளுலி இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றுள்ளது. அடுத்ததாக வரும் 16 மற்றும் 20 ஆம் தேதிகளில் 4, 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.     டிசம்பா் 23-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com