பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு

பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.
பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு

பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்விநேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:

நமது பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். அப்போதுதான் நாம் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ முடியும். இது, பொருளாதார ரீதியாகவும், வலிமை மிக்க நாடாகவும் நம்மை மேம்படுத்தும். பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, ஏற்றுமதிக்கான அனுமதி மற்றும் ஒப்புதல் ஆகியவை குறைந்த காலத்தில் வழங்கப்படுகின்றன.

நமது நட்பு நாடுகளுக்கு வா்த்தக ரீதியாக அல்லது கடன் அடிப்படையில் பாதுகாப்பு துறை ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, எந்தெந்த நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க இயலாது. பாதுகாப்புத் துறை ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான சூழல், உலக நாடுகளுக்கு இணையான தளவாடங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com