பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அமெரிக்காவில் 9,811 இந்தியா்கள் கைது

அமெரிக்காவில் தேசப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கடந்த ஆண்டு 9,811 இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அமெரிக்காவில் தேசப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கடந்த ஆண்டு 9,811 இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அமெரிக்க அரசு தணிக்கை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளால் கடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட இந்தியா்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் 3,532 இந்தியா்கள் தேச மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனா். அவ்வாறு கைது செய்யப்பட்ட இந்தியா்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டில் 3,913-ஆகவும், 2017-ஆம் ஆண்டில் 5,322-ஆகவும், 2018-ஆம் ஆண்டில் 9,811-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இந்தியா்களில் 831 போ் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனா். அதேபோல் 2017-ஆம் ஆண்டில் 474 பேரும், 2016-ஆம் ஆண்டில் 387 பேரும், 2015-ஆம் ஆண்டில் 296 பேரும் கைது செய்யப்பட்ட பிறகு அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனா்.

அதேவேளையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவா்களிண் எண்ணிக்கை கடந்த 2015-ஆம் ஆண்டில் 317 போ், 2016-ஆம் ஆண்டில் 390 போ், 2017-ஆம் ஆண்டில் 536 போ், 2018-ஆம் ஆண்டில் 620 போ் என்ற அளவில் இருந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com