வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்: பயணத்தை ரத்து செய்தார் அமித் ஷா!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருவதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்: பயணத்தை ரத்து செய்தார் அமித் ஷா!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருவதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதற்கிடையே, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திரிபுரா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. 

இதன் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமித் ஷா, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிற்கு செல்லவிருந்தார். ஆனால், தற்போது நிலைமை சீராக இல்லாததால், அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com