குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம், 'சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம், அனைவரும் சமம் என்பதை எந்த வகையிலும் மறுக்க முடியாது' என்பதை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14க்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு, நேற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com