நாடாளுமன்ற உறுப்பினராக தொடர ராகுலுக்கு தார்மிக உரிமை இல்லை: ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "இந்தியாவில் கற்பழிப்பு" என்ற கருத்தை வெளியிட்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு "தார்மிக உரிமை" இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்
c04drajnath065053
c04drajnath065053

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "இந்தியாவில் கற்பழிப்பு" என்ற கருத்தை வெளியிட்டதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு "தார்மிக உரிமை" இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தனது கருத்துக்கு ராகுல் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தால் மக்களவை ஒத்திவைப்புக்குப் பின்னர் இரண்டாவது முறையாக அவை கூடிய போது மக்களவையில் ராஜ்நாத் சிங் தனது கருத்தை தெரிவித்தார்.

"அவரது கருத்தால் நாட்டு மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர். வெளியில் அவர் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே நாங்கள் எங்கள் சகாக்களை இந்த அவையில் அழைத்து வந்தோம். ராகுல் காந்தி இந்த அவைக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு எம்.பி.யாக இருக்க அவருக்கு தார்மிக உரிமை இல்லை" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com