நாட்டின் பெண்களை ராகுல் அவமதித்துவிட்டார்: நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி தாக்கு

நாட்டின் பெண்களை ராகுல் அவமதித்துவிட்டார்: நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி தாக்கு

ராகுலின் இந்த விமர்சனம் நாட்டிலுள்ள பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையாகச் சாடினார். 

ஜார்க்கண்ட்  மாநிலத்தின் கொட்டா எனுமிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ''மேக் இன் இந்தியா'' என்று கூறி வந்தார். ஆனால் தற்போது ''ரேப் இன் இந்தியா'' எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாஜக எம்எல்ஏ, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு விபத்தும் ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து எதுவும் கூறாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி விமர்சித்தார்.

இந்நிலையில், ராகுலின் இந்த விமர்சனம் நாட்டிலுள்ள பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையாகச் சாடினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ஸ்மிருதி பேசியதாவது,

இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என்பது போன்று ராகுல் பேசியுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் இதுபோன்று பேசுவது வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாக இருக்கும். ராகுலின் இந்த விமர்சனம் நாட்டிலுள்ள பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு ராகுல் என்ன கூற நினைக்கிறார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பாஜக எம்.பி. லாகெட் சாட்டர்ஜி பேசுகையில், பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என எல்லோரையும் அழைத்தால், ரேப் இன் இந்தியா என ராகுல் அழைக்கிறார். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இந்தியாவிலுள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்பது போன்று இந்த அழைப்பு அமைந்துள்ளது. இது நாட்டிலுள்ள பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com