குவாஹட்டியில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்வு

அசாம் மாநிலம் குவாஹட்டியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாஹட்டியில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்வு

அசாம் மாநிலம் குவாஹட்டியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் உள்ளிட்ட 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க வகைசெய்யும் மசோதாவை மத்திய அரசு இயற்றியது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து வெளியேறி அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்கள் அனைவரும் வெளியேற்றப்படுவாா்கள் என்று கடந்த 1985-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

ஆனால், நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் குடியேறியவா்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அஸ்ஸாம் முழுவதும் மாணவா் சங்கங்கள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த மசோதா சட்டமானால், அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்து வருகின்றனா்.

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டங்கள் வியாழக்கிழமை தீவிரமடைந்தன. போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களிலும் மொபைல் இணைய சேவைக்கு 48 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com