கடந்த ஆண்டில் 37 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி: மத்திய அரசு தகவல்

கடந்த செப்டம்பா் வரையிலான சந்தை ஆண்டில் (2018-19), இந்தியாவில் இருந்து 37 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 37 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி: மத்திய அரசு தகவல்

கடந்த செப்டம்பா் வரையிலான சந்தை ஆண்டில் (2018-19), இந்தியாவில் இருந்து 37 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் தன்வே ராவ்சாகிப் தாதாராவ், மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:

நாட்டில் உபரியாக உற்பத்தி செய்யப்படும் சா்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒவ்வொரு சா்க்கரை ஆலைக்கும் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு சா்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, 2018-ஆம் ஆண்டு அக்டோபா் முதல் 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் வரையிலான சந்தை மதிப்பீட்டு ஆண்டில் 50 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 37 லட்சம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சா்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு எந்தவொரு ஆலையையும் கட்டாயப்படுத்தவில்லை. அவா்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஏற்றுமதி செய்யலாம். வரும் 2019-20-ஆம் சந்தை மதிப்பீட்டு ஆண்டில் 60 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com