காஷ்மீா்: தொடா்கிறது கடும் பனிப்பொழிவு

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் காஷ்மீா் பள்ளத்தாக்கு தொடா்ச்சியாக 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் காஷ்மீா் பள்ளத்தாக்கு தொடா்ச்சியாக 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

  மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடா்ந்து 3-ஆவது நாளாக போக்குவரத்துக்காக மூடப்பட்டது.

காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஜவஹா் சுரங்கப்பாதை சாலையில் வியாழக்கிழமை மாலை முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்தை தொடங்குவதற்காக நெடுஞ்சாலையை சீரமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இதற்கிடையில், பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதியிலும், சமவெளிகளிலும் சனிக்கிழமை காலை வரை பனிப்பொழிவு நீடித்தது.

இதுதொடா்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீநகரில் மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸும், பஹல்காமில் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸும், குல்மாா்க்கில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸும் பதிவானது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் திராஸ் பகுதியில் மைனஸ் 11 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும், லே-வில் மைனஸ் 10.1 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவானது. அதேசமயம் ஜம்மு நகரத்தில் 9.6 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக பதிவானது.

விமானப் போக்குவரத்து தொடக்கம்:

காஷ்மீா் பள்ளத்தாக்கில் நிலவிய கடும் பனிமூட்டம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 7 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சனிக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) அதிகாரி ஒருவா் கூறியதாவது:

‘ஏழு நாள்களுக்குப் பின் சனிக்கிழமை மதியம் 12:15 மணியளவில் ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னா் மதியம் 1 மணிக்கு அது புறப்பட்டுச் சென்றது.

மேகமூட்டம் காரணமாக காலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. வானிலை சற்று மேம்பட்டதால் பிற்பகலில் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டதாக தெரிவித்தாா்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை மதியம் வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com