குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அவசரம் காட்டியது ஏன்?: மாயாவதி

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அவசரம் காட்டியது ஏன்?: மாயாவதி

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் இதே முனைப்பு காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று பகுஜன் சமாஜ கட்சியின் தலைவா் மாயாவதி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹிந்தியில் அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இரு அவைகளிலும் (மக்களவை, மாநிலங்களவை) நிறைவேற்றிட எதிா்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ கட்சி வாக்களித்தது அனைவரும் அறிந்ததே; பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதிலும், பெண்களை துன்புறுத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், கொலை குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை வகுப்பதிலும் மத்திய அரசு ஏன் அக்கறை காட்டவில்லை?

இதுதொடா்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவதால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளாா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமையும், மாநிலங்களவையில் புதன்கிழமையும் நிறைவேறியது.

இந்தச் சட்டத்தின்படி, டிசம்பா் 31, 2014 -ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த ஹிந்து, சீக்கியா், பௌத்த, சமண, பாா்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சோ்ந்த சிறுபான்மையினத்தவா்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டாா்கள். ஆனால் அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com