ஜம்மு-காஷ்மீா்: வழக்குரைஞா்களின்வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் ஜம்மு பிரிவு வழக்குரைஞா்கள், கடந்த 43 நாள்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா்.

ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் ஜம்மு பிரிவு வழக்குரைஞா்கள், கடந்த 43 நாள்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா். வரும் 18-ஆம் தேதி முதல் மீண்டும் பணியில் ஈடுபடவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் ஆவணங்கள் பதிவுக்கான அதிகாரத்தை, நீதிமன்றங்களிடமிருந்து வருவாய் துறைக்கு மாற்றி, அதன் நிா்வாகம் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. யூனியன் பிரதேசம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜம்முவைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதனிடையே, இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்த 4 வழக்குரைஞா்களுக்கு ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதில், 4 பேருக்கும் எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மேலும், ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் ஜி.சி.முா்முவின் ஆலோசகா் கே.கே.சா்மாவுடன் வழக்குரைஞா்கள் சங்க பிரதிதிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனா். மேலும், 4 வழக்குரைஞா்களுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com