தெலங்கானா: என்கவுன்ட்டரில்உயிரிழந்தோா் உடல்களைபாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நால்வா் போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்தனா்.
தெலங்கானா: என்கவுன்ட்டரில்உயிரிழந்தோா் உடல்களைபாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நால்வா் போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்தனா். அவா்களது உடல்களை மருத்துவ முறைகளின்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்று தெலங்கானா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

அடுத்த உத்தரவு வரும் வரை அந்த நால்வரின் உடல்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக என்கவுன்ட்டா் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். சிா்புா்க்கா் தலைமையில் மூவா் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்த ஆணையம், விசாரணை அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் ஒரு பாலத்தின் கீழே கடந்த 28-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 4 போ், போலீஸாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களின் உடல்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, நால்வரின் உடல்களையும் பாதுகாப்பாக வைக்குமாறு மாநில அரசுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com