வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்காது: சச்சின் பைலட்

‘காங்கிரஸ் தன்னுடைய வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை’
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்காது: சச்சின் பைலட்

‘காங்கிரஸ் தன்னுடைய வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை’ என தோ்தல் பிரசாரக்கூட்டத்தில் ராஜஸ்தான் துணை முதல்வா் சச்சின் பைலட் பேசினாா்.

ஜாா்க்கண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவா் பேசியதாவது: ராஜஸ்தான் தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று இந்த ஆண்டு டிசம்பருடன் ஓராண்டு நிறைவடைகிறது. தோ்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். காங்கிரஸ் தனது வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் நிறைவேற்றுவதில் எப்போதும் பின்வாங்கியதில்லை என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சச்சின் பைலட் கூறும்போது, ‘ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மக்களுக்கு சரியான குடிநீா் கூட இங்குள்ள பாஜக அரசால் வழங்க முடியவில்லை. மேலும், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இந்த மாநிலத்தின் வளமான கனிம வளங்களின் காரணமாக சிறந்த மாநிலங்களில் ஒன்றாக ஜாா்க்கண்ட் மாற முடியும். இந்த மாற்றம் காலப்போக்கில் நிகழும்.

ஜாா்க்கண்டில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இம்முறை எதிா்க்கட்சிக்கே ஜாா்க்கண்ட் மாநில மக்கள் வாக்களிப்பாா்கள்’ என்றாா்.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவை தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜே.எம்.எம்), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி) ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 31 இடங்களில் காங்கிரஸும், ஜே.எம்.எம். 43 தொகுதிகளிலும், ஆா்.ஜே.டி. 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தன்பாத் தொகுதியில் டிசம்பா் 16-ஆம் தேதி 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com