சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் இன்று முதல் கட்டாயம்

டிச. 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ‘ஃபாஸ்டேக்’ தானியங்கி சுங்கவரி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் இன்று முதல் கட்டாயம்

டிச. 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ‘ஃபாஸ்டேக்’ தானியங்கி சுங்கவரி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னணு சுங்கவரி வசூல் திட்டமான ‘ஃபாஸ்டேக்’ எனப்படும் தானியங்கி சுங்கவரி அட்டையை டிச. 1ஆம் தேதி எல்லா வாகனங்களிலும் பயன்படுத்த வேண்டியது கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வாகன ஓட்டிகளின் கோரிக்கைக்கு இணங்கி டிச. 15-ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரியை செலுத்துவதற்கு ‘ஃபாஸ்டேக்’ அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தை சீராக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்ததிட்டத்தில் அனைவரும் பங்காற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

டிச. 15-ஆம் தேதி முதல் ‘ஃபாஸ்டேக்’ இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டால், பணமுறை பரிமாற்றத்தில் சுங்கரவரியை செலுத்தினால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ‘ஒரேநாடு ஒரேஃபாஸ்டேக்’ என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம், அதாவது ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரு வழி பணம் செலுத்தி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com