சட்டம்-ஒழுங்கு பிரச்னை: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் விவரம் கேட்ட பிரதமர் மோடி

கர்நாடகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரங்களைக் கேட்டறிந்ததாக, முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் விவரம் கேட்ட பிரதமர் மோடி

கர்நாடகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் பிரதமர் நரேந்திர மோடி விவரங்களைக் கேட்டறிந்ததாக, முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் பல மாநிலங்களில் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன.
 இந் நிலையில்,கர்நாடக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் சனிக்கிழமை தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்தின் பின்னணியில் கர்நாடகத்தில் காணப்படும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு வழிகாட்டுதல் வழங்கினார்.
 பின்னர், இடைத்தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதற்காக முதல்வர் எடியூரப்பாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நல்லாட்சியை வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
 ஜிஎஸ்டி பங்குத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவுடன் விவாதித்த பிரதமர் மோடி, கர்நாடகத்துக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகையை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தார். இதற்கு முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
 அண்மையில், புது தில்லியில் நடைபெற்ற பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் வென்று, கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதற்காக முதல்வர் எடியூரப்பாவை வெகுவாகப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com