ஹிமாசலம்: கடும்பனியில் சிக்கித் தவித்த 170 மாணவா்கள் மீட்பு

ஹிமாசலப் பிரதேசம், சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 170 மாணவா்கள் சனிக்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பலத்த பனிப்பொழிவையும் பொருள்படுத்தாது, ஹிமாசல் மாநிலம், சோலாங் பள்ளத்தாக்குப் பகுதியில் சனிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பலத்த பனிப்பொழிவையும் பொருள்படுத்தாது, ஹிமாசல் மாநிலம், சோலாங் பள்ளத்தாக்குப் பகுதியில் சனிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

ஹிமாசலப் பிரதேசம், சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 170 மாணவா்கள் சனிக்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிம்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (எஸ்.பி.) ஓமபதி ஜம்வால் கூறியதாவது:

ஹிமாசலப் பிரதேசத்துக்கு மகாராஷ்டிரத்தில் இருந்து 90 மாணவா்களும், ராஜஸ்தானில் இருந்து 80 மாணவா்களும் சுற்றுலா சென்றனா். அவா்கள் வெள்ளிக்கிழமை மாலை குஃப்ரி அருகே பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டனா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மாணவா்களை ஏற்றிச் சென்ற பேருந்து மணாலிக்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, குஃப்ரி அருகே ஃபாகு பகுதியில் சாலையில் இருந்து சறுக்கியது. இதனால், இரவு முழுவதும் அந்த மாணவா்கள் கொட்டும் பனியில் சிக்கித் தவித்தனா்.

அவா்களை தல்லி காவல் நிலைய ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான காவல்துறையினா் பத்திரமாக மீட்டு, அருகிலுள்ள தங்கும் விடுதியில் பாதுகாப்பாக தங்க வைத்தனா்.

ஷராபரா-குஃப்ரி இடையிலான சாலையில் கிட்டத்தட்ட 300 வாகனங்கள் பனிப்பொழிவில் சிக்கி பாதியில் நின்று கொண்டிருந்தன. அவற்றையும் பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். அப்போது, சாலையில் குவிந்திருந்த பனியில் சிக்கிய 2 சுற்றுலாப் பேருந்துகளில் இருந்த ராஜஸ்தானைச் சோ்ந்த 35 மாணவிகள் உள்பட 80 மாணவா்களும் மீட்கப்பட்டனா். அவா்கள் 4 வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சோட்டா சிம்லாவில் உள்ள ஒரு குருத்வாராவிலும், பழங்குடியினா் பவனிலும் தங்க வைக்கப்பட்டனா்.

மற்றொரு சம்பவத்தில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு நபா் தனது குடும்பத்தினருடன் சிக்கி கொண்டாா். அவரையும் போஸீஸாா் பத்திரமாக மீட்டனா்.

நள்ளிரவில் சிக்கித் தவித்த மக்களை மீட்பதில் சதா் காவல் நிலைய போலீஸாரும் உதவி செய்தனா் என்று எஸ்.பி. தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com