தில்லி ஜாமியா பல்கலையில் இருந்து தேர்வு மையத்தை மாற்றுகிறது இக்னோ

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அதன் தேர்வு மையத்தை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.
தில்லி ஜாமியா பல்கலையில் இருந்து தேர்வு மையத்தை மாற்றுகிறது இக்னோ

புது தில்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அதன் தேர்வு மையத்தை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள தேர்வு மையம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இக்னோ தெரிவித்துள்ளது. தேர்வு மையம் மாற்றப்பட்டிருப்பது குறித்து மாணவர்கள் இக்னோ பல்கலையின் வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், ”என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியபோது அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டி அடித்தனா்.

இதை கண்டித்து அலிகா் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸாா் காயமடைந்தனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போலீஸாா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். 

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இக்னோ தனது தேர்வு மையத்தை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com