குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்: மாயாவதி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்: மாயாவதி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியரிமைச் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். இல்லையெனில் அது எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். முன்பு காங்கிரஸ் செய்ததைப் போல தற்போது பாஜகவும் அவசரநிலையை உருவாக்கக்கூடாது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேரம் கோரியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com