பொருளாதார வீழ்ச்சியில் பங்குச் சந்தை மட்டும் எவ்வாறு உயருகிறது? - அரவிந்த் சுப்பிரமணியன் கேள்வி

நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடையும் போது, பங்குச்சந்தைகள் எவ்வாறு உயர்கிறது என்று மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடையும் போது, பங்குச்சந்தைகள் மட்டும் எவ்வாறு உயர்கிறது என்று மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அகமதாபாத் ஐ.ஐ.எம்-இல் 'நிதி, பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சிக்கான தேசிய பங்குச்சந்தை மையத்தை திறந்து வைத்து பேசிய  அரவிந்த் சுப்பிரமணியன், 'இந்த மையத்தின் முதல் திட்டம்(ப்ராஜெக்ட்), நாட்டின் பொருளாதாரம் குறித்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது; அதே நேரத்தில் பங்குச்சந்தை உயருகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடையும் சமயத்தில் பங்குச்சந்தை மட்டும் உயரக் காரணம் என்ன? இதனை ஆராய்ச்சி செய்து இந்த மையம் விளக்கம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்காக இந்த புதிருக்கு நீங்கள் விடைகாண வேண்டும். அது கண்டுபிடிக்கப்பட்டால்  நான் அமெரிக்காவில் இருந்து எந்த நேரத்திலும் இங்கு வருவேன்.

இந்தியாவில் பங்குச்சந்தைகள் போன்ற எனக்கு புரியாத வேறு பல விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலையை எதிர்கொள்கிறது என்பது மட்டும் உண்மை' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com