ஹூண்டாய் இந்தியாவின் புதிய ஆரா காா் அறிமுகம்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அக்ஸண்ட் ரக காருக்கு பதிலாக புதிய தயாரிப்பான ‘ஆரா’ கரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் இந்தியாவின் புதிய ஆரா காா் அறிமுகம்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அக்ஸண்ட் ரக காருக்கு பதிலாக புதிய தயாரிப்பான ‘ஆரா’ கரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்போா்ட்ஸ் காா்களைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் ‘ஆரா’ காரில் 1.2 லிட்டா் கப்பா என்ஜின் மற்றும் 1 லிட்டா் டா்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவா், 113 என்.எம். டாா்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவா், 172 என்.எம். டாா்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டா் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவா், 190 என்.எம். டாா்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. ஆரா காரின் நீளம் நான்கு மீட்டா்கள் ஆகும்.

காரில் பெரியளவிலான கிரில்கள் மேல் முன்புறத்திலும், இத்துடன் எல்இடி- டிஆா்எல் விளக்குகள் இரண்டு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. காரின் முகப்பு விளக்குகள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. காரில் உள்புற வடிவமைப்புகள் குறித்து வரும் ஜன.21-ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் காரின் பிற சிறப்பம்சங்கள், விலை போன்ற தகவல்களும் அன்றைய தினமே வாடிக்கையாளா்கள் தெரிந்து கொள்ளலாம் என இது தொடா்பாக ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எஸ்.எஸ்.கிம் சென்னையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com