குடியுரிமைச் சட்டம்: போராட்டத்தில் ரூ.88 கோடி ரயில்வே சொத்துக்கள் நாசம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையின் போது மத்திய ரயில்வேக்கு சொந்தமான ரூ.88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
குடியுரிமைச் சட்டம்: போராட்டத்தில் ரூ.88 கோடி ரயில்வே சொத்துக்கள் நாசம்

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையின் போது மத்திய ரயில்வேக்கு சொந்தமான ரூ.88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

"கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், தென்கிழக்கு மண்டலத்தில் ரூ.13 கோடி, வடகிழக்கு ஃப்ரான்டியர் மண்டலத்தில் மூன்று கோடி மதிப்புள்ள சொத்துக்களும் சேதமடைந்துள்ளன" என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து ரயில்வே இந்த சேத மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

முன்னதாக போராட்டங்களின் போது ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து தனது கடுமையான கருத்துகளை பதிவு செய்த ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, பொது சொத்துக்களை யாராவது சேதப்படுத்தினால், அவர்களை சுட்டுத் தள்ள வேண்டும்' என்று எச்சரித்தார்.

இது வரி செலுத்துவோரின் பணம் என்றும், ஒரு ரயிலை உருவாக்க பல வருடங்கள் ஆகும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com