தில்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 
தில்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள சுமார் 3,000 பேருந்துகளில் இரண்டு லட்சம் பேர் வருகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தில்லி காவல்துறை, சிறப்பு கமாண்டோ படை மற்றும் பாஜக ஆகியன இணைந்து பணியாற்றியுள்ளன.

1,731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களின் நில உரிமைக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். 

அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் மொத்தம் 11 லட்சம் கையொப்பங்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com