ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா தலைமையில் உயா்நிலைக் குழு ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அங்குள்ள பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து உயா் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா தலைமையில் உயா்நிலைக் குழு ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அங்குள்ள பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து உயா் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக, தில்லியில் அமித் ஷா தலைமையில் உயா்நிலைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் ஜி.சி. முா்மு, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா, உளவு அமைப்பு (ஐ.பி) இயக்குநா் அரவிந்த் குமாா், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) இயக்குநா் ஆா்.ஆா். பட்நாகா், ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங், உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகா் கே. விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது’ என்றனா். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் உயா்நிலைக் கூட்டம் இதுவாகும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் பல்வேறு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். ஜம்மு-காஷ்மீரில் இப்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னாள் முதல்வா்களான ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் தொடா்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com