
2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிப் படகில் விவேகானந்தா நினைவு மண்டபத்துக்குச் சென்றார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
அவரைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி புதுதில்லி சிறப்பு பிரதிநிதி தலவாய் சுந்தரம் காவல் துறை இயக்குநர் திரிபாதி குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.
இதன்பிறகு, மாலை 5.10 மணிக்கு அவர் தனி படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்றார். இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு வந்த அவர் கார் மூலம் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.