ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா: சோனியாவுக்கு நேரில் அழைப்பு!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழா: சோனியாவுக்கு நேரில் அழைப்பு!


ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும், ஜேஎம்எம் - காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன், டிசம்பர் 29-ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்கிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று (புதன்கிழமை) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்த ஹேமந்த் சோரன், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன்,

"பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இந்த விழாவில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார் என சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவுள்ளேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com