அவரது தலைமையில் நாடு நல்லாட்சியைக் கண்டது! அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை இன்று (25 டிசம்பர் 2019) நினைவு கூர்ந்தனர்.
அவரது தலைமையில் நாடு நல்லாட்சியைக் கண்டது! அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை இன்று (25 டிசம்பர் 2019) நினைவு கூர்ந்தனர். 1924 - ஆம் ஆண்டு, இதே நாளில் பிறந்தார் வாஜ்பாய்.

ஹிந்தி மொழியில் ஒரு நிமிடம் ஓடக்கூடிய காணொளியில் மோடி கூறியது, ‘வாஜ்பாயின் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை, ஆனால் அவரது மெளனத்திற்கு இன்னும் அதிக சக்தி இருக்கிறது என்று கூறினார்.  எப்போது மெளனமாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும் என்றுணரும் அற்புதமான சக்தி அவருக்கு இருந்தது" என்று மோடி கூறினார்.

வாஜ்பாய்
வாஜ்பாய்

வாஜ்பாய் தனது "தேசியவாத சிந்தனை, புனிதமான பிம்பம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை" ஆகியவற்றால் இந்திய அரசியலில் என்றும் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று அமித் ஷா கூறினார்.

"சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் அடல்ஜியின் வாழ்க்கை. அதில் அதிகாரத்தின் மோகம் இல்லை. அவரது தலைமையின் கீழ், நாடு நல்லாட்சியைக் கண்டது" என்று அமித் ஷா தமது சுட்டுரையில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com