தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் ரேஷன் நிறுத்தப்படும்: கேரள அரசுக்கு எச்சரிக்கை

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ள நிலையில், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் பேசியுள்ளார். 

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

கேரளத்தில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டினை அரசு அமல்படுத்தாவிட்டால், அம்மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும். நாட்டில் இயற்றப்படும் அனைத்துச் சட்டங்களுக்கும் அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியம். எந்தவொரு மாநிலமும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. மாநிலத்தில் சில விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்பட்சத்தில் அதற்கு முதல்வர் பினராயி விஜயன் தான் பொறுப்பேற்க வேண்டும். பினராயி மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகிய இருவரையும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com