Enable Javscript for better performance
"சஹாரா' தலைவர் சுப்ரதா ராய் பிப். 28-இல் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    "சஹாரா' தலைவர் சுப்ரதா ராய் பிப். 28-இல் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன்

    By DIN  |   Published on : 01st February 2019 01:48 AM  |   அ+அ அ-   |    |  

    supreme-court3

    முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தை திருப்பித் தராத வழக்கில், சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் வரும் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது.
    அதிக வட்டி தருவதாகக் கூறி, முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.24, 000 கோடியை திருப்பித் தராததால், சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், அந்த குழுமத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ரவிசங்கர் துபே, அசோக் ராய் செளதரி ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ 2 ஆண்டுகள் சிறையில் இருந்த சுப்ரதா ராய், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பரோலில் வெளியே வந்தார். அதிலிருந்து அவரது பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    இதனிடையே, முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதற்கான தொகையை(வட்டியுடன் சேர்த்து ரூ. 25, 700 கோடி ), இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) சஹாரா குழுமம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சொத்துகளை விற்று, அந்தத் தொகையைச் செலுத்துவதாக நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை ரூ. 15, 000 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 
    அதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
    செபி கணக்கில் பணம் டெபாசிட் செய்வதற்கு சஹாரா குழுமத்துக்கு 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் யாரும் நடந்து கொள்ளவில்லை. இந்த 6 மாதத்தில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு சஹாரா குழுமத்தின் இயக்குநர்கள் எடுத்த முயற்சி நீதிமன்றத்துக்கு நம்பிக்கை தரும் வகையில் இல்லை. இனிமேலும் அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க முடியாது. பிப்ரவரி 28-ஆம் தேதி சுப்ரதா ராய் மற்றும் மற்ற இயக்குநர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp