Enable Javscript for better performance
மக்களவை, மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை: தேவேந்திர ஃபட்னவீஸ்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவை, மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை: தேவேந்திர ஃபட்னவீஸ்

    By DIN  |   Published on : 01st February 2019 01:50 AM  |   அ+அ அ-   |    |  

    devendra_fatnavis

    வரும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மகாராஷ்டிர சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
    மக்களவைத் தேர்தல் வரும் மே, ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. எனவே, அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஏனெனில், அந்த மாநில சட்டப் பேரவையின் பதவிக் காலமும் நிறைவடைய இருக்கிறது. இத்துடன் பேரவை கலைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிவாக்கில் பேரவையின் பதவிக் காலம் முடியும் மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தினால், அரசுக்கு செலவு குறையும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு அந்த மாநில அரசுகள் ஒப்புக் கொள்வது முக்கியமானது.
    இந்நிலையில், மும்பையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து மகாராஷ்டிரப் பேரவைக்கும் தேர்தல் நடத்த அனுமதிக்குமாறு பாஜக தலைமை உங்களிடம் கூறியுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் ஏதுமில்லை. எனவே, மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து மகாராஷ்டிர சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றார்.
    இதனிடையே, சிவசேனையிடம் பாஜக சரணடைந்துவிட்டதாக மும்பை மாநகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் மட்டுமே கூட்டணி என்ற நோக்கத்தில் சிவசேனையுடன் பாஜக பேச்சு நடத்தியது. ஆனால், அவர்கள் சட்டப் பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜகவுக்கு நிபந்தனை விதித்தனர். மேலும், மக்களவைக்கும், மகாராஷ்டிர பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் சிவசேனை நிர்பந்தித்தது. இதிலும் பாஜக சரணடைந்துவிட்டது. எனவேதான், மக்களவைக்கும், பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கிடையாது என்று ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார். இது காங்கிரஸூக்குத் தெரியும்' என்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp