இடைக்கால பொது பட்ஜெட் 2019: அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பட்ஜெட் உரையாற்றினார்.
இடைக்கால பொது பட்ஜெட் 2019: அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!

புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பட்ஜெட் உரையாற்றினார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்."
 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன்..

தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பட்ஜெட் உரையாற்றி வருகிறார்.

இதில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.

முன்னதாக தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்பை வெளியிட்டதும், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.

இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருப்பவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. 

வருமான வரி விலக்கு உயர்வால் சுமார் 3 கோடி நடுத்தரக் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

****

2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நடந்தது என்ன? பியூஷ் கோயல் விளக்கம்

புது தில்லி: 2016ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன்கள் என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கியுள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றிய பியூஷ் கோயல் கூறியதாவது, 

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.1.35 லட்சம் கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளியே வந்தது.

ரூ.50 ஆயிரம் கோடி கணக்கில் வராத சொத்துக்கள் கண்டறியப்பட்டன.

3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

•••

மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

தேசியக் கல்வித் திட்டத்துக்கு ரூ.38,572 கோடி நிதி ஒதுக்கீடு.

2030க்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 

****

12.11: வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதாவது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக அதிரித்துள்ளது.

நடுத்தர மக்கள் மீதான வரிச் சுமையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருமான வரித்துறை மக்கள் எளிதில் அணுகும் வகையில் மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நேரடி வரி வசூல் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

திரைப்படத் தயாரிப்புக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
 

•••

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க பெட்ரோல் கிணறுகள் அதிகரிக்கப்படும்.

இணையதள பயன்பாடு 50% மடங்கு அதிகரித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

திருட்டு டிவிடியை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
 

•••
 

11.58 : நெடுஞ்சாலைகளை அமைப்பதில் மிக வேகமாக செயல்படும் நாடாக இந்தியா உள்ளது. சராசரியாக தினமும் 27 கி.மீ. தெலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

அகல ரயில் பாதைகளில் இருந்த அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளும் அகற்றம்.

சூரிய மின்சக்தி உற்பத்தி 10% அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்திருப்பதன் மூலம் வேலை வாய்ப்பும் உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.


•••

11.54: முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் 70% பேர் பெண்கள்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.

பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள்.

ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜிஎஸ்டி பதிவு செய்த சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் தொகைக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும்.

ஒரு கோடி வரையிலான கடன்களுக்கு 3% வட்டி கழிவு வழங்கப்படும்.
 

***

11.47: ஏழை, எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 8 கோடி இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 10%ல் இருந்து 14% ஆக உயர்த்தப்படும்.

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் 70% பேர் பெண்கள்.
 

***

11.40: அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

மாதம் ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மெகா ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 10 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

பொருளாதார வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பி.எஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.6 லட்சமாக உயர்வு
 

•••

11.31: 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.

இந்த 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக விவசாயிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்துள்ளோம்.

கிராமப்புறங்களில் கழிப்பறை வசதி 98% நிறைவேற்றப்பட்டுள்ளது.


•••

11.28: கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார தீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில்  இருந்த நிலை மாறி இப்போது மிகவும் குறைந்துள்ளது. பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் குடும்பங்களில் 35% செலவு கூடியிருக்கும். பணவீக்க விகிதத்தை 4.4 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

உலக நாடுகளிலேயே மிக வேகமான பொருளாதார முன்னேற்றத்தை இந்தியா கண்டு வருகிறது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com