மக்களவைத் தேர்தல் அறிக்கையான இடைக்கால பட்ஜெட்!

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளநிலையில், இன்று 2019-2020 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மக்களவைத்
மக்களவைத் தேர்தல் அறிக்கையான இடைக்கால பட்ஜெட்!


வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளநிலையில், இன்று 2019-2020 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையாகவே தாக்கல் செய்துள்ளார் இடைக்கால நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் 2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்து வரும் இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் அறிவித்துள்ளார் ரயில்வே துறை அமைச்சரும், இடைக்கால நிதி அமைச்சருமான பியூஷ் கோயல்.

வரும் மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையாகவே உள்ள இடைக்கால பட்ஜெட்டின் சலுகைகளை இதோ உங்களுக்காக....

- மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம்.

- ஊரக சுகாதாரம் 98 சதவீதம் உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன.

- 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

- 2 ஹெக்டேர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரூ.6 ஆயிரமும் 3 தவணையாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

- சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

- ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்க ரூ.1.70 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 

- விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

- பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும்.

- மீன் வர்த்தகம் மூலம் கடந்தாண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

- இந்திய பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பு மீன்வளத்துறை அளித்து வருகிறது.

- மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று உருவாக்கப்படும். 

- கால்நடை மற்றும் மீன் வளப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்படும். 

- கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

- விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

- இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3 சதவீதம் வரை வட்டி மானியம்.

- கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை .

- பொருளாதார நலிந்த பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும்.

- இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாக்கப்படும்.

- கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நாடாக உலக அளவில் இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 

- விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

- லஞ்சம், ஊழலை ஒழிக்க வெளிப்படையான நடைமுறைகளை கொண்டு வந்துள்ளோம். 

- நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது.

- வருமான வரி தாக்கல் முழுவதும் கணினி மயமாக்கப்படும்.


- 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அறிமுகம்.

- 34 கோடி வங்கி கணக்குகள் ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரி வருவாய் உயர்ந்துள்ளது.

- தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை. 

- வீடு வாங்குவோர் சுமையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளது. 

- 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

- நேரடி வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து, ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

- நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 27 கி.மீட்டர் என்ற அளவில் - தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

- தொழில் வளத்தை மேம்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டு தேசிய நீ்ர்வழி சரக்கு போக்குவரத்து தடம் உருவாக்கப்பட்டுள்ளது.

- ரயில்வே துறைக்கு சுமார் ரூ.65,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அகல ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே லெவல் கிராஸிங் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. 

- ரயில்வே திட்டங்களுக்கான முதலீடு அதிகரிப்பு.

- பாதுகாப்புதுறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும்.

- சூரிய மின் சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்வு.

- இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது .

- செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.

- அத்தியாவசிய மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மிக மிக குறைந்த அளவு வரி.

- வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்.

- இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என பியூஷ் கோயல்.

- வருங்கால வைப்பு நிதி ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 

- பணி கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

- முறைப்படுத்தப்பட்ட தொழில் துறையில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

- நிரந்தரமாக ஓரிடத்தில் தங்காத மக்களுக்கு சமூக நலத்துறை கீழ் தனி நலவாரியம் அமைக்கப்படும்.

- மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிப்படும். 

- லஞ்சம், ஊழலை ஒழிக்க வெளிப்படையான நடைமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.

- நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டது.

- நாடு முழுவதும் பின்தங்கிய நிலையில் இருந்து 115 மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

- எவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

- வெளிப்புறத்தில் மலம் கழிக்கும் முறை நாட்டில் இருந்து ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்டது.

- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

- 2009-2014 காலகட்டத்தில் பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பணவீக்கம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.

- திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.

- நேரடி வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

- வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்து ரிட்டர்ன் கேட்டவர்களின் 99.54 விழுக்காட்டினரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

- 4 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

- பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு பதிவுநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

- 2030ஆம் ஆண்டுக்குள் 10 இலக்குகளை இந்தியா எட்டும். அனைவருக்கும் தூய, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை.

உலக அளவில் சிறப்பு வாய்ந்த பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா ஜொலிக்கிறது. கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் முடங்கியிருந்த நிலைமையை மோடி அரசு மாற்றியுள்ளது. 2022ம் ஆண்டு நாம் அனைவரும் ஒரு புதிய இந்தியாவை காண இருக்கிறோம். எங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள் என மோடி அரசின் சாதனைகள் மற்றும் வரும் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையாகவே தாக்கல் செய்துள்ளார் கோயல்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, கடலூர் மாவட்டங்கள் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் என விவசாயத்தையே அழித்து வரும் மோடி அரசு, 2 ஹெக்டேர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரூ.6 ஆயிரமும் 3 தவணையாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை வேதனை அடையவைத்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வதாரத்தையே இழந்து தவித்தபோது ஒரு சிறு ஆறுதல் கூட அளிக்காத அரசு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது என்பது வேதனையாக உள்ளது. இதைவிட வேதனை தமிழக விவசாயிகள் சுமார் 90 நாட்களுக்கு மேலாக தலைநகர் தில்லியில் உடை, உணவின்றி மண்டையோட்டுடன் போராட்டம் நடத்தியபோது கண்டுகொண்டுள்ளாளாமலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக வராத கவனம் தற்போது மோடி அரசுக்கு அதுவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மீது இன்று வந்துள்ளதை, விவசாயிகளோ, மீனவர்களோ, பொதுமக்களோ உணரமாட்டார்களா என்ன. அந்தயளவிற்கு மக்கள் முட்டாள் என நினைவிட்டதா மோடி அரசு. விவசாயிகள், மக்களை முட்டாள் என நினைத்து விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 ரூபாய் வீதம் ஆண்டு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவதன் மூலம் விவசாயிகள் கவுரமாக வாழ வழிவகை செய்திடுமா? 

விவசாயிகள், மீனவர்கள் மீதமான திடீர் கரிசன சலுகைகளை மக்கள் நம்பமாட்டார்கள். மோடி அரசு குறித்து கடந்த நான்கரை ஆண்டுகளாக சரியாக சிந்தித்து வைத்துள்ள மக்கள், தங்களது முடிவுகளை உரிய நேரத்தில் உரிய விதத்தில் பதிலாக அளிப்பார்கள் என்பது உறுதி.

நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர் அப்போது கண்டுகொள்ளாத மோடி அரசு, மூன்று மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பின் அழுத்தம் மற்றும் மக்களின் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதையும், எதிர்க்கட்சிகள் கூட்டணிகளை கண்டு அஞ்சியே விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது மோடி அரசு என்பதே உண்மை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com