பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம்: பியூஸ் கோயல்

பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 
பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம்: பியூஸ் கோயல்


புதுதில்லி: பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் 2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று தாக்கல் செய்து வரும் இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் அறிவித்துள்ளார் ரயில்வே துறை அமைச்சரும், இடைக்கால நிதி அமைச்சருமான பியூஷ் கோயல்.

2019 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் பியூஷ் கோயல்,  மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று உருவாக்கப்படும். கால்நடை மற்றும் மீன் வளப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்படும். கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com