கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்னாவில் ஈடுபடவுள்ளேன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா

கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க நாளை தர்னாவில் ஈடுபடவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். 
கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்னாவில் ஈடுபடவுள்ளேன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா


கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க நாளை தர்னாவில் ஈடுபடவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். 

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு வந்தனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ராஜீவ் குமார் இல்லத்துக்கு விரைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா டிஜிபி மற்றும் மேயர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

இந்த ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 

"மேற்கு வங்கத்துக்கு பாஜக மன உளைச்சலை தருகிறது. எதிர்க்கட்சிகளின் மாநாட்டை நடத்தியதற்காக அவர்கள் வலுக்கட்டாயமாக மேற்கு வங்கம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பிரதமர் நேற்று அச்சுறுத்தும் வகையில் பேசியதை நீங்கள் பார்த்தீர்கள். 

தற்போதும் சொல்கிறேன், ராஜீவ் குமார் உலகின் தலைசிறந்தவர். எனது படைக்கு பாதுகாப்பளிப்பது எனது கடமை என்பதை நான் பெருமையாக சொல்வேன். போதிய ஆவணம் இல்லாமல் கொல்கத்தா காவல்துறை தலைவர் இல்லத்துக்கு வருகிறீர்கள். 

நான் எனது படையுடன் துணை நிற்பேன். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். 

இன்று நான் மிகவும் வருத்தமாக உள்ளேன். கூட்டாட்சி அமைப்பை அழிப்பது என்பது இதுதான். 

கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க  மெட்ரோ சேனல் அருகே நான் தர்னாவில் ஈடுபடவுள்ளேன். நாளை சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும். அங்கு நான் ஆலோசனை நடத்தவுள்ளேன். இந்த தர்ணா சத்தியாகிரகம் ஆகும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com