திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு 

சிபிஐ அதிகாரிகள் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தி இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு 

புது தில்லி: சிபிஐ அதிகாரிகள் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கொல்கத்தாவைச் சேர்ந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில், சிறப்பு புலானாய்வுக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இல்லத்திற்கு ஞாயிறன்று சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அங்கே கொல்கத்தா போலீசாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துமதிய அரசின் எதேச்சதிகார போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்விவகாரம் திங்களன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்த விவகாரத்தில் மேற்கு வங்கத்தை அரசியல் ரீதியாக  கைப்பற்ற சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் குற்றம் சாட்டி குரல் எழுப்பினர்.

மக்களவையில் இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ரராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இருந்த போதிலும் எம்.பிக்கள் தொடந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளியில் தொடர்ந்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போன்று மாநிலங்களவையிலும் வெவேறு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com