குடிமைப் பணியில் நேர்முகத் தேர்வு வரை சென்றவர்களுக்கு பணி வாய்ப்பு?

குடிமைப் பணி தேர்வெழுதி நேர்முகத் தேர்வு வரை சென்றும் பணி வாய்ப்பு கிடைக்காதவர்களை வேறு பணிகளுக்கு மத்திய அரசு தேர்வு செய்துகொள்ள
குடிமைப் பணியில் நேர்முகத் தேர்வு வரை சென்றவர்களுக்கு பணி வாய்ப்பு?


குடிமைப் பணி தேர்வெழுதி நேர்முகத் தேர்வு வரை சென்றும் பணி வாய்ப்பு கிடைக்காதவர்களை வேறு பணிகளுக்கு மத்திய அரசு தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) யோசனை தெரிவித்துள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 21ஆவது மாநில அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று யுபிஎஸ்சி தலைவர் அரவிந்த் சக்úஸனா பேசியதாவது:
குடிமைப் பணிக்காக தேர்வெழுதி நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வி அடைபவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு மற்ற அமைச்சகங்களும், அமைப்புகளும் பணிவாய்ப்பு வழங்கலாம்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 11 லட்சம் பேர் குடிமைப் பணி தேர்வெழுதுகின்றனர். ஆனால், இறுதியில் 600 பேர் மட்டுமே பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சில நிலைகளில் தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள். அந்தத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வு வரை முன்னேறி தோல்வி அடைபவர்களும் உண்டு. யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த விண்ணப்பத்தை தாமாகவே முன்வந்து திரும்பப் பெறவும் இனி வாய்ப்பு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். தேர்வுகளில்
மேலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றார் அரவிந்த் சக்úஸனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com