சுடச்சுட

  

  அமெரிக்காவிடம் இருந்து புதிய ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை

  By DIN  |   Published on : 10th February 2019 09:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Chinook_helicopters_for_the_Indian_Air_Force

   

  அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தன.

  இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சினூக் ரக 15 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஏற்படுத்தப்பட்டு, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  இதையடுத்து இந்த 15 ராணுவ ஹெலிகாப்டர்களில் முதல்கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் குஜராத்தில் உள்ள முந்த்ரா விமான நிலையத்துக்கு வந்தடைந்தன.

  பலவகை பயன்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகை ஹெலிகாப்டர்கள் முதல்கட்டமாக சீனா, பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பயன்பாடு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai