சுடச்சுட

  

  எடியூரப்பாவின் தொலைபேசி உரையாடல்: கர்நாடக சட்டப்பேரவையில் இன்று விவாதம்

  By DIN  |   Published on : 11th February 2019 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "ஆபரேஷன் கமலா' திட்டத்தில் மஜத எம்எல்ஏவை இழுக்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட தொலைபேசி உரையாடல் பதிவு குறித்து, கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விவாதிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
   ராய்ச்சூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
   கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக முதல்வர் குமாரசாமி, மஜத எம்.எல்.ஏ நாகன கெüடாவின் மகன் சரண்கெüடாவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். சந்திப்பில் நாகன கெüடாவை "ஆபரேஷன் கமலா' திட்டம் மூலம் பாஜகவுக்கு இழுக்க சரண்கெüடாவுடன், பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக தெரிவித்து, தொலைபேசி உரையாடலை வெளியிட்டார்.
   அந்த உரையாடலில் சட்டப்பேரவைத் தலைவர் உள்பட பலரிடம் பேரம் பேசிதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திங்கள்கிழமை சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
   "ஆபரேஷன் கமலா' பற்றியும் எனக்கு தெரியாது. தன்னிச்சையாகச் செயல்படுவதுமில்லை. சட்டவிதிகளுக்கு உள்பட்டு பணிகளைச் செய்து வருகிறேன். பதவிக்குக் கெüரவம் ஏற்படும் வகையில் பணிகளை செய்து வருகிறேன்.
   ஆனால், அண்மையில் ஏற்பட்டுள்ள சில நிகழ்வுகளால் வேதனை அடைந்துள்ளேன். பொது வாழ்வில் உள்ளவர்களை மக்கள் இகழ்ந்து பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். சட்டப்பேரவைக்கு வர இயலாதவர்கள், தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai