சுடச்சுட

  

  முல்லைப்பெரியாறில் அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் கேரளா பதில்

  By DIN  |   Published on : 11th February 2019 12:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mullai_Periyaru


  புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

  முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

  பதில் மனுவில், முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை, மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai