சுடச்சுட

  

  மூளை இல்லாதவர்: பொதுமக்கள் முன்னிலையில் பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ 

  By DIN  |   Published on : 11th February 2019 05:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  collector_MLA

   

  இடுக்கி: கேரளாவில் பொதுமக்கள் முன்னிலையில் பெண் கலெக்டரை "மூளை இல்லாதவர்" என்று  எம்.எல்.ஏ ஒருவர் திட்டிய சம்பவம் நடந்துள்ளது.

  கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் சப்-கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ் (30). இவர் இப்பகுதியின் முதல் பெண் சப்-கலெக்டர் ஆவார். தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில்  உத்தரவை மீறி , கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். எனவே இந்தப் பணிகளை நிறுத்தும்படி, ரேணு ராஜ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

  இதுதொடர்பாக பொதுமக்கள் முன்னிலையில்  ரேணு ராஜூடன் எம்.எல்.ஏ ராஜேந்திரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்களுடன் அவர் பேசும்போது கூறியதாவது:

  இந்த விவகாரத்தில் அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இதுவே முதல் முறை. கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது கிராம பஞ்சாயத்து தான். இவர் கிடையாது. விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும். இவர் போன்றோரை நான் இதுவரை பார்த்ததில்லை. இது போன்று மூளை இல்லாதவர்களை எல்லாம் இங்கு பணியமர்த்தி உள்ளனர்" என்றார்.

  இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு நான் அறிக்கை அனுப்பி விட்டேன். எனது கடமையை நான் தொடர்ந்து செய்வேன். அவர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலையில்லை என்று ரேணு ராஜ் தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai