ஆந்திராவிடம் திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார்: சந்திரபாபு நாயுடு மேடையில் மோடியைச் சாடிய ராகுல்

ஆந்திராவிடம் இருந்து திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஆந்திராவிடம் திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார்: சந்திரபாபு நாயுடு மேடையில் மோடியைச் சாடிய ராகுல்

புது தில்லி: ஆந்திராவிடம் இருந்து திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரம் காரணமாக பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விலகினார். பின்னர் அவர் தற்போது எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு தில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திராவிடம் இருந்து திருடி அம்பானியிடம் கொடுத்து விட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத மேடைக்கு சென்ற ராகுல் காந்தி, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் அங்கு பேசும்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து, அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி எங்கெல்லாம் பயணம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பொய்களைதான் அறிவித்து வருகிறார். ஆந்திரா சென்று அங்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக  பொய்களை பரப்பியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் போது அங்கு ஒரு பொய்யை தெரிவிக்கிறார். மராட்டியம் செல்லும்போது அங்கும் பொய்யை வெளியிடுகிறார்.

பிரதமர் மோடி எந்தவித நம்பகத்தன்மையையும் பெறவில்லை. அவர் ஆந்திராவிடம் இருந்து திருடியதை அம்பானியிடம் கொடுத்துவிட்டார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com