"சிறுபான்மையினரிடம் கவனம் செலுத்துகிறது பாஜக'

பாஜக தலைவர்கள் சிறுபான்மையினரிடம் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர்கள் சிறுபான்மையினரிடம் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
 மேலும், "அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற பாஜகவின் நிலைப்பாட்டை அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
 இதுகுறித்து, வடக்கு கோவா எம்.பி.யும், ஆயுஷ் துறை மத்திய அமைச்சருமான ஸ்ரீபாத் நாயக் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 கோவாவில் உள்ள பாஜக வாக்குச் சாவடி பணியாளர்களிடையே அமித் ஷா பேசினார். அப்போது, சிறுபான்மையினரிடம் கவனம் செலுத்துமாறு கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, பாஜகவின் "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற கொள்கையை அவர்களிடம் எடுத்துரைக்குமாறு அமித் ஷா கூறினார்.
 கட்சியை நாம் விரிவுபடுத்த வேண்டும் என்றால், நம்மோடு அனைவரையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவே தான் சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். இதை வெறும் வாக்குகளுக்காக மட்டும் செய்ய வேண்டாம் என்றும் அவர் பாஜக தலைவர்களிடம் தெரிவித்தார்.
 அனைத்துச் சமுதாயத்தினரையும் தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவரது கருத்தின் சாராம்சமாகும். கோவாவில் தற்போது அமைந்துள்ள அரசில் 7 பாஜக எம்எல்ஏக்கள் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று ஸ்ரீபாத் நாயக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com