சுடச்சுட

  

  கும்பமேளாவை அரசியல் நோக்கங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது: அகிலேஷ் தடை குறித்து மாயாவதி காட்டம்

  By DIN  |   Published on : 12th February 2019 09:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DzMuHMAVsAEDdge

   

  உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டார். பாஜக தன்னை கண்டு அஞ்சுவதாலேயே இதுபோன்று செய்திருப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.

  இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சமாஜவாதி கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர் அமைப்புகளிடையே மோதல் ஏற்பட்டு சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால் தான் அகிலேஷ் யாதவ் வரவேண்டாம் என அலகாபாத் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது. எனவே தான் அதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

  பிரயாக்ராஜில் நுழைய அகிலேஷ் யாதவுக்கு தடை விதித்தது கண்டனத்துக்குரியது. சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி பாஜக-வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் அவர்கள் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்று தடை விதிக்கின்றனர். கும்பமேளாவை தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது. அகிலேஷ் பிரயாக்ராஜில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, அதை நிரூபிக்கிறது என்று உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai