சுடச்சுட

  

  சொந்த மாநிலத்தின் பல்கலை.யில் நுழைய அகிலேஷ் யாதவுக்கு தடை!

  By DIN  |   Published on : 12th February 2019 08:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Akhilesh_Yadav

   

  உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நுழைய முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  பிரயாக்ராஜ் பல்கலைக்கழகம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

  அலகாபாத் பல்கலைக்கழகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என பாஜக-வினர் நினைக்கின்றனர். மேலும் அங்கு நடைபெறும் தேர்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அவ்வப்போது அங்கு செல்லும் முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த தேர்தலில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

  நான் பங்கேற்க இருந்த மேடையின் அருகிலேயே 3 வெடிகுண்டுகள் வெடித்தன. ஆனால், அதற்கு அரசும், பல்கலை. நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்திய ஜனநாயகத்திலேயே இதுபோன்று நடந்தது கிடையாது. மாணவர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நான் செல்வதை கண்டு பாஜக-வுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் என்னை தடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

  முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அரசியல்வாதிகள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அலகாபாத் பல்கலை. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai