சுடச்சுட

  

  தில்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கேஜரிவால் அறிவிப்பு

  By DIN  |   Published on : 12th February 2019 01:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  delhicm

  தில்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீவிபத்தில் உயரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

  தில்லி கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

  தகவல் அறிந்து 28 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவிபத்திற்கான காரணங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  இதனிடையே தீவிபத்தில் உயரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். முன்னதாக தீவிபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai